இரணைமடு தாயின் கோரத்தாண்டவம்! இறுதிவரை போராடும் இயற்கை..

கிளிநொச்சி – இரணைமடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பாதைகள் பாரிய அளவு சேதமடைந்துள்ளது. மேலும் சாலை ஓரங்களில் இருக்கும் இயற்க்கை வளங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தில் மரங்கள் கீழே சாய்ந்தும் உயிருக்கு போராட்டி கொண்டுயிருக்கின்றன.

இது விடயமாக சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அது மட்டும் இன்றி அப்பகுதி மக்களின் இயழ்பு வாழ்கையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 14 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அந்தப் பேரவலம் ஏற்படுத்திவிட்ட வலிகளிலிருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை.

இந்நிலையில் மீண்டும் ஒரு இயற்கை அனர்த்தம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மக்களை நிர்கதியாக்கியுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை, இரணைமடு குளத்தின் வான்கதவுகளு திறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.