ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இந்தியர்கள் உயிரிழப்பு!

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள கால்லியர்வில்லே நகரில் கிறிஸ்துமஸ்-க்கு முந்தைய தினம் வீடு ஒன்றில் திடீரெனத் தீப்பற்றியது.

அதில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஷர்ரோன், ஜாய் மற்றும் ஆரோன் நாயக் ஆகிய மூன்று இளம் சிறார்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்த வீட்டில் புகை ஏற்பட்டால் ஒலிக்கும் அலாரம் செயல்படாமல் போனதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் பெற்றோர், தங்கள் குழந்தைகளை டேனி என்பவரின் வீட்டில் விட்டு விட்டு இந்தியாவுக்கு வந்திருந்தனர்.

இந்த விபத்தில் வீட்டு உரிமையாளர் டேனியும், அவரது மகனும் ஜன்னல் வழியே குதித்து உயிர் தப்பிய நிலையில், அவரது மனைவியும் உயிரிழந்தார்.

இந்தச் சோக சம்பவம் குறித்து மாணவர்களின் ஃப்ரெஞ்ச் முகாம் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “பாஸ்டர் நாயக் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்காக நாம் வேண்டிக்கொள்வோம்.

ஏனென்றால் அவர்கள் தங்கள் மூன்று குழந்தைகளை இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். ஆனால் ஒரு தீவிபத்து அவர்களின் உயிரை பறித்துவிட்டது எனக் கூறப்பட்டுள்ளது.