என்னால வளர்க்கமுடியலை, ஆனால் என்னை பார்க்க கண்டிப்பா அவன் வருவான்!

சென்னை வளசரவாக்கத்தில் சுதந்திர தினத்தன்று, மழைநீர் வடிகால்வாயில் கிடந்த பிறந்து இரண்டு மணிநேரமான பச்சிளம் ஆண் குழந்தையை துணை நடிகை கீதா மீட்டெடுத்தார். மேலும் அந்த குழந்தைக்கு சுதந்திரம் எனவும் பெயரிட்டார்

பின்னர் அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சையளித்து அதனை பாதுகாப்பான காப்பகத்தில் அனுமதித்தார். மேலும் முறைப்படி அந்த குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாகவும் கீதா கூறியிருந்தார்.

ஆனால் தற்போது குழந்தை சுதந்திரத்தை தத்தெடுப்பது குறித்து கீதா கூறுகையில்,
குழந்தையை தத்தெடுக்க பல விதிமுறைகள் இருப்பதாக காப்பகத்தில் கூறினார்கள்.
ஆனால் அதையெல்லாம் பின்பற்றுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு ஏராளமான சிக்கல்கள் உள்ளன.

எனவே, குழந்தை சுதந்திரத்தை தத்தெடுக்க முடியாத நிலையில் நான் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன். மேலும் அவனுக்கு உடல்நலம் சரியில்லை என்ற தகவல் கேட்டதும், என்னையறியாமல் நான் மருத்துவமனைக்கு பார்க்க சென்றேன்.

மேலும் குழந்தைகள் இல்லாதவர்களிடம் சுதந்திரம் கிடைத்தால் அவனுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும். எங்கு வளர்ந்தாலும் அவன் நலமாகவும் சிறப்பாகவும் இருக்கவேண்டும்.

சுதந்திரத்திற்கு விவரம் தெரியும் போது நான் உயிரோடு இருந்தால் அவன் நிச்சயம் என்னைச் சந்திக்க வருவான் என உருக்கமாக கூறியுள்ளார்.