விரைவில் க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள்…..

க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இறுதி முடிவுகளை விரைவில் வெளியிடவுள்ளதாக பரீட்சைத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெற்ற க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத 28ஆம் திகதி இறுதியில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கை விரைவில் மேற்கொள்வதற்கு அதிகாரிகள் தங்களை அர்ப்பணித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் க.பொ.த உயர் தர பரீட்சை நடைபெற்றது. மேற்படி பரீட்சையில் 3 இலட்சத்து 21,000 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.