இந்தியாவில் பள்ளிக்கு சென்று திரும்பிய 15 வயது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள நவுமேலி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சஞ்சாலி(15). இவர் கடந்த 18-ஆம் திகதி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, மர்மநபர்கள் சிலர் சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, பெட்ரோல் உற்றி எரித்து கொலை செய்துவிட்டனர்.
இதனால் இது தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், சிறுமியின் கொலைக்கும் 25 வயதான அவரது உறவினர் மகன் யோகேஷுக்கும் தொடர்பிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகித்துள்ளனர்.
Teenage girl set on fire by youth in Agra, while @dgpup was having meeting with senior police officials in Agra @agrapolice @Uppolice pic.twitter.com/LAlhGXJaCj
— Arvind Chauhan (@arvindcTOI) December 18, 2018
இதையடுத்து பொலிசார் அவரை பிடித்து இரண்டு நாட்களுக்கு மேலாக விசாரித்துள்ளனர். ஆனால் அவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி சிறுமியின் பெற்றோரு, எந்த ஒரு குற்றமும் கூறாத்தால், பொலிசார் அவரை விடுவித்தனர்.
அதன் பின் வீட்டிற்கு வந்த யோகேஷ் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு பேரின் இறப்புக்கு ஏதோ காரணம் இருக்கிறது என்று பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதில் முதலாக யோகேஷின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர் அப்போது அங்கு சில கடிதங்கள் மற்று அவரது செல்போன் சாட், இரண்டு நபரின் புகைப்படங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
செல்போனில் இருந்த இருவரையும் கைதுசெய்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், யோகேஷ், சஞ்சாலியின் உறவினர் மகன். இவர், சிறுமியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும், ஆனால் சிறுமி இதை ஏற்றுகொள்ளவில்லை.
பல முறை தன் காதலை சொல்லியும் சிறுமி கேட்காததால், ஆத்திரத்தில் இருந்த யோகேஷ் சிறுமியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
அதன் படி சிறுமியைக் கடத்தி கொலைசெய்துள்ளார். கொலைக்கு உதவியாக இருக்க தன் நண்பர்களுக்கு தலா 15,000 தருவதாக கூறியுள்ளார். இந்த மூன்று பேரும் இணைந்து திட்டமிட்டு, சஞ்சாலியைக் கொலைசெய்துள்ளது தெரியவந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டும் இதுவரை யோகேஷ் மீது சிறுமி வீட்டில் இருந்து யாரும் புகார் அளிக்கவில்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது.
இது குறித்து சிறுமியின் தாய் கூறுகையில், எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள். நாங்கள் அனைவரையும் நன்றாகப் படிக்கவைக்கிறோம். இது, இங்கு உள்ள பலருக்கும் பொறாமையாக உள்ளது. அந்தக் கோபத்தில் தான் யாரோ இப்படிச் செய்துள்ளனர். அதற்காகத்தான், என் மகளின் புத்தகப் பைகளையும் சேர்த்து எரித்துள்ளதாக கூறியுள்ளார்.
சிறுமியின் சகோதரியோ, யோகேஷ் கொலை செய்தான் என்பதை என் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவன் குடும்பம் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருங்கியவர்கள். அதனால், அவன்மீது தவறு இருந்தாலும் எங்கள் குடும்பத்தினர் யோகேஷை காப்பாற்றவே பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாள்களாக, அரசியல் தலைவர்கள் அந்தச் சிறுமியின் வீட்டுக்கு தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, சிறுமியின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
முன்னர் இது சாதி ரீதியிலான கொலை எனப் பேசப்பட்டது. இதனால், கொலையைக் கண்டித்து அந்தக் கிராம மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். சிறுமியின் கொலைக்கு நியாயம் வேண்டும் என்றும், அவரது வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும் கோஷமிட்டனர். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.
பிறகு நடந்த விசாரணையில்தான், இது சாதி ரீதியிலான கொலை இல்லை எனக் காவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.