சுமந்திரனுக்கு மிகப்பெரிய பரிசு கொடுத்து இன்பத்தில் ஆழ்த்திய ரணில்!

சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி பிரபலத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்தக் கோரிக்கையை நிராகரித்த சுமந்திரன் தனது ஆலோசனைக்கமைய தனது செயலாளர் மூலம் அமைச்சின் வேலைகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்துள்ளார்.

தான் அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசியத்திற்கமைய செயற்பட நேரிடும் என டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் மூலம் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும் சட்டத்துறையுடன் போராடிய சுமந்திரன், ரணிலுக்கு பிரதமர் பதவியையும் ஆட்சியை பெற்றுக் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அமைச்சு பதவியை வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.