கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், எடக்காடு பகுதியில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பல ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகிறார்.
நேற்று காலை அந்த மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்த விஜேஷ்(வயது 36) என்ற காம வெறியன் அந்த மூதாட்டியின் வயதையும் பொருட்படுத்தாமல், பலவந்தகம பாலியல் பலாத்காரம் செய்தார். அவனது பிடியில் இருந்து தப்பமுடியாமல் மூதாட்டி பயங்கரமாக அலறி, கூச்சலிட்டுள்ளார்.
அவரது கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் விரைந்து மூதாட்டியின் வீட்டுக்குள் வந்தனர். அதற்குள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் விஜேஷ். அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரியின் பெயரில் காவல் துறையினர் இன்று விஜேஷை கைது செய்துள்ளனர்.
இதேபோன்ற சம்பவங்கள் கேரளாவில் தொடந்து நடைபெற்று வருகிறது. இளம்பெண்கள், மூதாட்டிகள் என்ன பல இதுபோன்ற காம வெறியர்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க அரசு கடுமையான சட்டம் கொண்டுவரவேண்ண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறையும்.