டிசம்பர் 31க்கு பிறகு இந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது.!

தற்போது மொபைல்போன் என்பது அனைவரின் உயிர்நாடியாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நவீன உலகத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும்
அந்த பயனீட்டார்கள் அனைவரும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என ஏராளமான ஆப்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள வாட்ஸ்ஆப் மிகவும் உதவியாக உள்ளது.மேலும் இதுவரை 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் 2018-ம் ஆண்டு வாட்ஸ்ஆப் மூலம் ஏரளமான போலி செய்திகள் பரவி, அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்நிலையில் அதைத் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.

மேலும் அதைத் தடுக்க வாட்ஸ்ஆப் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்தும் இதுவரை மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

வாட்ஸ்ஆப் செயலியை ஜியோ போன் போன்ற ஓஎஸ் இயங்குதளப் பியூச்சர் போன்களிலும், ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்த முடியும். ஆனால் விரைவில் இந்த வாட்ஸ்ஆப் செயலியை பல போன்களில் பயன்படுத்த முடியாது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது .

அதாவது நோக்கியா S40 போனில் 2018 டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்ஆப் செயலி இயங்காது. மேலும் 2020 பிப்ரவரி 1-ம் தேதிக்குப் பிறகு ஐபோன் 7 Ios மற்றும் ஆண்டிராய்டு 2.3.7 வெர்ஸன் இருக்கும் போன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது வாட்ஸ்ஆப் பயனீட்டார்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.