கப்பலேறியது திமுகவின் மானம்.. ஒரு கோடி கப்பம் கேக்கும் முக்கிய நிர்வாகி..?

சேலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயலுவதுடன், உரிமையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையரிடம் புகார்அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் விஜய் சாரங்கபாணி. இவர் புதனன்று சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபல திமுக பிரமுகர் மோகன் என்பவர் மீது சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மோசடிமற்றும் கொலை மிரட்டல் குறித்து புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சேலம் அருகே நெய்க்காரப்பட்டியில் தனது உறவினருக்கு சொந்தமான 7.78 ஏக்கர்நிலத்தை கடந்த 1994 ஆம் ஆண்டு ஆதிதிராவிட மக்களுக்காக நில ஆர்ஜிதம் செய்யப்போவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரும், அப்பகுதியின் சேலம் மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினருமான மோகன் என்பவர் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கிற்காக எனது உறவினர்களிடம் இருந்து நிலத்திற்கான அசல் பத்திரம் மற்றும்கையெழுத்துகளையும் பெற்றுக்கொண்ட மோகன், தற்போது அந்த இடத்தில் நில உரிமையாளர்களை அனுமதிக்காமல் அவரின் பெயருக்கு கிரையம் செய்து கொடுக்கும்படியும், இல்லையெனில் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார்.

ஆகவே, திமுக பிரமுகர் மோகனிடமிருந்து தங்களுக்குசொந்தமான நிலத்தின் அசல் ஆவணங்களை மீட்டுத் தருவதுடன், நிலத்தின் உரிமையாளர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததற்காக அவர் மீது உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.