இந்தோனேசியாவை மக்களை பொறுத்த வரையில் அவர்களுக்கு போதாத காலம் என்றுதான் கூற வேண்டும். அந்த நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் தாக்கத்தால் பல மக்கள் பரிதாபமாக உயிரிழந்தும்., பலர் உடமைகளை இழந்து தவித்து வந்தனர்.
இந்தநிலையில்., இந்தோனேசியாவின் சுந்தா ஸ்ட்ரேய்ட் கடற்கரை பகுதியில் கடந்த 23 ம் தேதியன்று அங்குள்ள உள்ளூர் நேரப்படி சுமார் 9.27 மணியளவில் யாரும் எதிர்பார்க்காத வேலையில் சுனாமி அலைகளானது தாக்கியது. இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத மக்கள் சுமார் 430 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில்., தற்போது சுமார் 128 மயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் சுனாமிக்கு இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் இருக்கும் ஜாவா தீவில் உள்ள எரிமலையானது வெடித்து சிதறியதால் ஏற்பட்ட அதிர்வலைகள் காரணமாக சுமார் 65 அடி (20 மீ) உயரத்திற்கு எழும்பிய இராட்சத அலைகளின் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திடீரென தாக்கிய சுனாமியின் காரணமாக அங்குள்ள கடற்கரையோர கிராமங்கள் மட்டும் நகரங்களில் இருந்த வணிக வளாகங்கள்., கட்டிடங்கள் சுமார் 22 ஆயிரம் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., அந்த பகுதிகளில் திடீரென தொற்றுநோயும் பரவிவருவதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.