இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் மேத்யூஸ் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டாகாமல் 33 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அவரின் மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் 5532-ஆக உயர்ந்தது.
இதையடுத்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் அட்டப்பட்டு எடுத்திருந்த 5502 ஓட்டங்களை மேத்யூஸ் முந்தினார்.
தற்போது இலங்கை அணி சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மேத்யூஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.