சீனாவில் திருமணம் செய்து கொள்வதற்கு பெண்கள் கிடைக்காத காரணத்தால் வெளிநாடுகளில் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடத்தில் இருந்த சீனா, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, முப்பது ஆண்டுகளுக்கு முன் ‘ஒரு குழந்தைக் கொள்கை’ 1979 இல் அமல்படுத்தியது.
இந்தக் கொள்கையை மீறி அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொண்ட தம்பதியர், அபராதங்கள் , வேலையிழப்பு, கட்டாயக் கருச்சிதைவு போன்ற பல்வேறு தண்டனைகளுக்கு உள்ளானார்கள்.
பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த கொள்கை, 2015 ஆம் ஆண்டு விலக்கப்பட்டது.
அதே நேரம், ஆண் வாரிசு மீதான விருப்பத்தால், பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்கத் தொடங்கியதன் விளைவு, சீனாவில் பெண்களைவிட, 3.3 கோடி இளைஞர்கள் அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சீன இளைஞர்கள் திருமண வயதை நெருங்கியும் மணப்பெண்கள் கிடைக்காமல், வெளிநாடுகளில் பணம் கொடுத்து மணப்பெண்களை விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொள்கின்றனர்.
மற்றொரு புறம், பெருகிவரும் மணப்பெண் பற்றாக்குறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கடத்தல் காரர்கள், அருகில் இருக்கும் வியட்நாம், கம்போடியா, மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து இளம் பெண்களை கடத்தி சீன இளைஞர்களுக்கு விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.