தமிழகத்தில் திருமண ஆசைகாட்டி ஏமாற்றப்பட்ட 17 வயது மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இவருக்கும் மண் அள்ளும் இயந்திர டிரைவராக வேலை செய்து வரும் சக்தி (26) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் 3 ஆண்டுகளாக பழகி வந்தனர்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, மாணவியை சக்தி பலாத்காரம் செய்துள்ளார்.
இதன் காரணமாக மாணவி கர்ப்பமானார். சில காலம் கர்ப்பத்தை மாணவி மறைத்த நிலையில் பின்னர் அதை பெற்றோர் கண்டுப்பிடித்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து மாணவியை கல்லுாரிக்கு செல்லவிடாமல் பெற்றோர் நிறுத்தி விட்டனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டதும், மாணவியை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். இங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
தன்னை திருமண ஆசைகாட்டி கர்ப்பமாக்கிய சக்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி மாணவி மகளிர் பொலிசில் புகார் செய்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் சக்தியை கைது செய்துள்ளனர்.