ஜீரண சக்தியால் அவதியடையும் நபர்களுக்கு நல்ல செய்தி.!!

இன்று உள்ள பெரும்பாலோருக்கு இருக்கும் பெரிய பிரச்சனையாக இருப்பது எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகவில்லை என்று கூறிவிட்டு பிடித்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு பின்னர் பலர் அவதிருகின்றனர். அந்த வகையில் உடலுக்கு தேவையான எளிதில் ஜீரண சக்தியை வழங்கும்.

ஜீரண சக்தியை வழங்கும் ஜீரா சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 1 கிண்ணம்.,
சிறிய வெங்காயம் – 2 எண்ணம்.,
சீரகம் – 1 தே.கரண்டி.,
கிராம்பு – 2 எண்ணம்
அண்ணாச்சிப்பூ – 1 எண்ணம்.,
பிரிஞ்சு இலை – 1 எண்ணம்.,
இலவங்கப்பட்டை – 1 எண்ணம்.,
தண்ணீர் – இரண்டு கிண்ணம்.,
கொத்தமல்லி – தேவையான அளவு.,
நெய் மற்றும் உப்பு – தேவையான அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.

ஜீரண சக்தியை வழங்கும் ஜீரா சாதம் செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தலையை சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

எடுத்துக்கொண்ட பாசுமதி அரிசியை நீரில் ஊறவைத்து வடிகட்டிய நீரை தனியாக எடுத்துக்கொள்ளவும்.

குக்கரின் மூலம் முதலில் நெய்யை ஊற்றி கிராம்பு., இலவங்கப்பட்டை., பிரிஞ்சு இலை மற்றும் அன்னாசிப்பூவை வறுத்துக்கொள்ளவும். பின்னர் சிறிதளவும் சீரகத்தை சேர்த்து அது வெடித்தவுடன்., வெங்காயத்தை போட்டு வறுத்தெடுக்கவும்.

பின்னர் அதில் அரிசியை 2 குவளை நீரில் வேகவைத்து பின்னர் இரண்டு விசில் வந்தவுடன் இறக்கினால் அருமையான ஜீரா சாதம் தயார்.