புதைத்த சடலத்தை வெளியில் எடுத்த மர்மநபர்கள்: பொதுமக்கள் அவதி!

வீரகேரளத்திலுள்ள சுடுகாட்டில், புதைத்து ஆண் சடலத்தை வெளியே போட்டு விட்டு வேறு சடலத்தை புதைத்து சென்றதால், தூர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் ரோடு வீரகேரளம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமாக 3 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் வீரகேரளம், நாகராஜபுரம், நம்பியழகன் பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் இறந்தவர்களைஅடக்கம் வெய்ய பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த சுடுகாடு பராமரிப்பு இன்றி முற்புதர்களாக  கிடக்கிறது. மேலும் அருகில் மின்மயானம் இயங்கி வருவதால், உடலை புதைக்காமல் எரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இறந்தவரின் உடலை, இந்த சுடுகாட்டில் புதைப்பதற்காக, குழி தோண்டியபோது, அதில் ஏற்கனவே புதைத்து 10 நாட்களே ஆன ஆண் சடலம் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த சடலத்தை வெளியே எடுத்து அப்படியே போட்டு விட்டு, மற்றொரு சடலத்தை அந்த குழியில் புதைத்துவிட்டு சென்றுள்ளனர். அதனால் வெளியே போட்டு சென்ற சடலம் அழுகிய நிலையில் இருந்ததால், அப்பகுதியே துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வடவெள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கடைசியாக, இப்பகுதியில் இறந்தவர் யார், அவர் இப்பகுதியை சேர்ந்தவரா அல்லது வேறு பகுதியை சேர்ந்தவரா, அவசர கதியில் பிணத்தை புதைத்து சென்று உள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதைத்து உடலை வெளியே போட்டு விட்டு, வேறு உடலை புதைத்து சென்றவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.