திரைப்பட பாணியில்., விஷமருந்தி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.!

கன்னியாகுமரி மாவட்டத்தை அடுத்துள்ள தக்கலை முட்டைக்காடு பகுதியை சார்ந்த வாலிபர் கப்பலில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இரணியல் பகுதியை சார்ந்த பெண்ணிற்கும் திருமணம் செய்வதற்கு கடந்த வருடத்தில் நிச்சியம் செய்யப்பட்டது.

அந்த வகையில் திருமண நாளானது நெருங்கியதும்., கப்பல் பணியை நிறைவு செய்துவிட்டு மீண்டும் திருமணத்திற்கு தயாராகி இல்லத்திற்கு திரும்பினார். திருமண ஏற்பாடுகளை இருவீட்டார் சார்பில் பயங்கரமான முறையில் அதிரடியாக ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.

அந்த வகையில்., மணமகன் வீட்டார் சார்பில் மணப்பெண்ணுக்கு பட்டு சேலைகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அனைத்தும் அவர்களது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

அந்த சமயத்தில் அவர்களின் இல்லத்தில் இவர்களை வரவேற்க ஆட்கள் இல்லாததை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த அவர்கள் விசாரித்த போது மணப்பெண் விஷம் அருந்தியதாக தெரிவித்துள்ளனர். மேலும்., காரணம் குறித்து வினவிய போது அவர்களின் தரப்பில் எந்த விதமான பதிலும் கூறாததால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் கடுமையான அளவு துயரத்தில் ஆழ்ந்திருந்த மணமகன் வீட்டார் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து இருந்த வேலையில்., மணமகனின் உறவினரின் பெண் ஒருவரிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்ட போது., இருவரும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் குறித்த சுப முகூர்த்த நேரத்திலேயே திருமணம் நடைபெற்றது. மேலும்., திருமண நேரத்தில் கடைசியாக மணப்பெண் விஷமருந்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.