5 நாட்களாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலார்கள்.!!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் மேகாலயாவில் உள்ள ஜைன்டியா மாவட்டத்தில் லும்தாரி கிராமத்தில் நிலாக்கரி சுரங்கமொன்று உள்ளது. இந்த சுரங்கமானது எந்த விதமான அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்தது. இந்த சுரங்கத்திற்கு அருகிலேயே லிட்டின் என்ற ஆறானது ஓடுகிறது.

சுரங்கத்தில் விபத்து ஏதேனும் ஏற்படும் போது பணியாற்றும் தொழிலாளர்கள் உள்ளூர் வாசிகளாக இருந்தால் மக்கள் பிரச்சனை செய்வார்கள் என்ற காரணத்தால்., சுரங்கத்தில் நடைபெறும் பணிகளுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

சுரங்க தொழிலாளர்கள் 350 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். இந்த சுரங்கத்தின் இருபுறங்களிலும் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கடந்த 13 ம் தேதியன்று ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்தது.

இவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட துவங்கினர். தொடர்ந்து அங்கு மழை பெய்து வந்ததன் காரணமாக மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டதால் அவர்கள் உள்ளேயே இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.

சுரங்கத்தை சூழ்ந்திருந்த தண்ணீரை தொடர்ந்து வெளியேற்றி வரும் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் போதே தேசிய மீட்பு படையினர் சுரங்கத்தின் 30 அடி ஆழத்திற்கு சென்று மேற்கொண்ட சோதனைகளில் சம்பவ இடத்தில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தனர். அந்த துர்நாற்றமானது அங்கு தேங்கியிருக்கும் நீரினால் கூட வீசலாம் என்று தெரிவிக்கின்றனர்.

தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியிருக்கும் பணியாளர்களுக்கு என்ன ஆனது? என்று தற்போது வரை ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் அவர்கள் உயிருடன் இருப்பார்களா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.