புது வருடத்தை வரவேற்கும் வகையில், புதுச்சேரியில் 7 அடி உயர சாக்லெட் ஸ்பைடர்மேன் சிலை வைக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
புதுச்சேரி மிஷன் வீதியில் அமைந்துள்ள, பிரபல ஜூகா பேக்கரியில், ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், மகாத்மா காந்தி, அப்துல் கலாம் உள்ளிட்ட பிரபலங்களின் உருவச் சிலைகளை சாக்லெட்டால் வடிவமைப்பது வழக்கம். அந்த வகையில், வரும் புது வருடத்தை வரவேற்கும் விதமாக, 7 அடி உயரத்தில் ஸ்பைடர்மேன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பேக்கரியின் உள்புறத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த சாக்லெட் ஸ்பைடர் மேன் சிலையை, அங்கு வரும் குழந்தைகள் குதூகலத்துடன் பார்த்து ரசிக்கின்றனர். சுற்றுலா பயணிகள், அந்த சிலை முன்பு நின்று உற்சாக செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.
இதுகுறித்து ஜூகா பேக்கரி நிர்வாகிகள் கூறியதாவது;
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், எங்கள் நிறுவனம் சார்பில் பல்வேறு பிரபலங்களின் உருவங்களை சாக்லெட்டால் வடிவமைப்பது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு 7 அடி உயரத்தில் ஸ்பைடர்மேன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 362 கிலோ சாக்லெட்டால் செய்யப்பட்ட இந்த சிலையை வடிவமைக்க, 158 மணி நேரம் ஆனது” என்று தெரிவித்தார்.