திருமணமாகாத ஏக்கத்தில் பெண் செய்த செயல்…

சென்னையில் திருமண தோஷம் நீக்குவதாக கூறி பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரோம்பேட்டை ராதா நகரில் வசித்துவரும் பார்த்தசாரதி (38) என்ற பெண்ணுக்கு இன்னும் திருமணமாகாமல் இருந்தது.

38 வயதாகியும் திருமணம் ஆகவில்லையே என ஏங்கிய பார்த்தசாரதி தோஷம் நீக்குவதற்காக சாமியார் ஒருவரை அனுகியுள்ளார்.

அதன் படி தடை நீங்க பூஜைசெய்ய வேண்டும் என கூறிய அந்த ம‌ர்ம நபர் தங்க சங்கிலியை கழற்றி சுவாமி படத்தில் அணிவிக்குமாறு கூறியுள்ளார்.

அதனை நம்பி பார்த்தசாரதி செயினை கழட்டிய போது, ம‌ர்ம நபர் செயினை திருடி விட்டு தப்பிசென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிட்லபாக்கம் பொலிசார் சில்வர் சீனிவாசன் என்ற அந்த பிரபல கொள்ளையனை தேடி வருகின்றனர்.