சென்னையில் தனது கணவரின் பிறந்தநாளன்று மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஜெய்கணேஷ் என்பவரது மனைவி பிரவீனா.
9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 4-ம் வகுப்பு படிக்கும் பிரதீப் என்ற மகன் உள்ளான்.
கடந்த புதன்கிழமை காலை ஜெய்கணேஷின் பிறந்த நாள், கணவனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த மனைவி பிரவீனா, ஜெய்கணேஷ் மற்றும் மகன் பிரதீப் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாங்கும் சம்பளத்தில் பெற்றோருக்கு உதவும் ஜெய்கணேஷ், எதிர்கால சேமிப்பிற்கு பணம் கொடுக்கவில்லை என பிரவீனா அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கணவனின் பிறந்தாளை தன்னுடைய இறந்தநாளாக பிரவீனா மாற்றியது அக்குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.