பிரித்தானிய இளவரசி கேட்டின் முதல் முத்தம்!

முகத்தில் நாணத்துடனும், பற்களில் பொருத்திய கம்பியுடனும் யாரிடமும் பேசாத ஒரு ரிசர்வ் டைப் இளம்பெண்ணாக இருந்த கேட்டை, எல்லோரும் காதலிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணாக மாற்றியது அவர் படித்த Marlborough கல்லூரி.

Downe House என்ற பள்ளியில் படிக்கும்போது எல்லோராலும் கேலி செய்யப்படும், வம்புக்கிழுக்கப்படும் ஒரு மாணவியாக இருந்திருக்கிறார் கேட்.

அந்த பள்ளியின் தலைமையாசிரியர் இன்றும் கேட்டை அப்படித்தான் நினைவு கூறுகிறார். மிக மோசமாக கேலி செய்யப்பட்டு, மெலிந்த உருவமும், வெளிறிய நிறமுமாக தன்னம்பிக்கையே இல்லாதவராக காணப்பட்டார் கேட் என்கிறார் அவர்.

மிக அதிக மன அழுத்தம் காரணமாக தோல் நோய் கூட அவருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கிறார், அவருக்கு வீட்டில் டியூஷன் எடுத்த ஆசிரியை.

ஹாக்கி விளையாட்டு அவரது மாற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது எனலாம். GCSE தேர்வுகளுக்குப்பின் அர்ஜெண்டினாவுக்கு ஒரு விளையாட்டுப் போட்டிக்காக சென்றார் கேட்.

அதன் பின்னர் கரீபியனுக்கு தனது குடும்பத்துடன் சென்ற கேட், மீண்டும் பள்ளிக்கு திரும்பி வரும்போது ஆளே மாறியிருந்தார்.

பற்களில் கட்டியிருந்த கம்பியை அகற்றிவிட்டு, மேக் அப் எல்லாம் போட்டு அழகு தேவதையாக ஜொலித்த கேட்டை பள்ளியிலிருந்த அத்தனை பையன்களும் கண்களில் காதல் வழிய பார்த்தார்கள்.

ஆனால் அவரது மனதில் முதலில் இடம்பிடித்தது, அவரது தோழியான ஆலிசின் அண்ணன்தான்.

அவரது முதல் முத்தத்தை பெறும் பாக்கியம் வுடி என்னும் அந்த நபருக்குத்தான் கிடைத்தது என்றாலும், அந்த காதல் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

Willem Marx என்னும் இன்னொரு நபர்மீது கேட்டுக்கு ஒரு குட்டிக் காதல் வந்தது என்றாலும், அதுவும் முழுமை பெறவில்லை.

அதன் பின் கேட் அதிகம் எந்த ஆணிடமும் பழகவில்லை. அவரது தோழிகள், கேட் தன்னை யாரோ ஒருவருக்காக பத்திரமாக சேமித்து வைத்திருந்தார் என்கிறார்கள்.

பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக வில்லியம் அந்த பள்ளிக்கு வந்தார். அங்குதான் இருவரும் காதலில் விழுந்தார்கள்.

முதல் முத்தம் வில்லியமுக்கு கிடைக்கவில்லை என்றாலும், அவரது வாழ்க்கையே அல்லவா வில்லியமுக்கு அர்ப்பணித்துவிட்டார் கேட்.