ரஷ்யாவில் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய மகனை 70 துண்டுகளாக நறுக்கி பார்சல் செய்த தாயை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ரஷ்யாவை சேர்ந்த Lyudmila என்ற பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு கையில் ஒரு பெரிய பையுடன் டாக்சியில் ஏற முயன்றார்.
இதற்கிடையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வாசம் வருவதை உணர்ந்த பக்கத்து வீட்டு பெண் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், Lyudmila-விடம் இருந்த பையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர்.
அதனுள் மனித கை மற்றும் கால் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பேசிய Lyudmila, என்னுடைய மகனை விட்டு அவனுடைய மனைவி பிரிந்ததிலிருந்தே ஒரு கொடுமையான மிருகத்தை போன்று மாறிவிட்டான்.
அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, என்னை அவனுடைய பிரிந்த மனைவி என நினைத்து அடித்து கொடுமைப்படுத்தினான்.
ஒரு கட்டத்தில் பாத்ரூமில் வைத்து என்னை துஸ்பிரயோகம் செய்தான். இதுகுறித்து நான் பொலிசாரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
என்னுடைய மகனின் கொடுமை தாங்காமல், சமைக்கும் பாத்திரத்தை வைத்து அவனுடைய தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன். பின்னர் அவனுடைய ஆணுறுப்பை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குப்பை தொட்டியில் வீசி எறிந்தேன்.
அதனை தொடர்ந்து உடலுறுப்பைகளை 70-க்கும் மேற்பட்ட துண்டுகளாக நறுக்கி, பிளாஸ்டிக் பையில் அடைத்தேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் 23 மாதங்கள் நகரத்தை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதேசமயம் அனுமதி இல்லாமல் முகவரியை மாற்ற முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.