செலவுக்கு பணம் தராததால் ஆத்திரத்தில் மகன், தனது சொந்த தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த கீழ்ராவந்தவாடி கிராமத்தில் சுந்தரராமன் என்ற விவசாயி வாழ்ந்து வருகிறார். இவருக்கு வேலைக்கு செல்லாமல் சுற்றி திரியும் விக்னேஷ் என்ற மகன் உள்ளார்.
விக்னேஷ் அவ்வப்போது, பணம் கேட்டு தந்தையை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் தந்தை – மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்துள்ளது.
இதேபோல, நேற்று மாலையும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விக்னேஷ், தந்தை சுந்தரராமனின் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளான்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையறிந்த தண்டராம்பட்டு காவல் துறையினர்,விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.