மீண்டும் தலைதூக்கும் குழந்தை கடத்தல்.! திருப்பதியில் ஒன்றரை வயது குழந்தை கடத்தல்.!! கண்ணீரில் பெற்றோர்.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லதூர் மாவட்டத்தை சார்ந்தவர் பிரசாந்த் ஜி ஜாதவ். இவரது ஒன்றரை வயதுடைய மகனின் பெயர் வீரேஷ். பிரசாந்த் நீ தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு திட்டமிட்டு., அதன் படி திருப்பதிக்கு வந்தனர்.

திருப்பதிக்கு வந்த இவர்கள் பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டபத்தில் தனது குழந்தையுடன் உறங்கிக்கொண்டு இருந்தனர். பயண நேரத்தில் இருந்த அசதியின் காரணமாக அனைவரும் அயர்ந்து உறங்கிவிட்டு., பின்னர் காலையில் எழுந்துள்ளனர்.

அப்போது இவர்களின் குழந்தையை பார்த்த போது குழந்தை அருகில் இல்லாததை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மண்டபத்தில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை சோதனை செய்ய ஆரம்பித்தனர். அந்த சோதனையில்., 40 வயதுடைய நபர் ஒருவர் குழந்தையை தூக்கி சென்றது தெரியவந்தது.

உடனடியாக இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் குழந்தையை கடத்தி சென்ற நபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., திருப்பதியில் அதிகளவில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு காமிராக்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.