பறையிசை குழுவினரே, போட்டுடைத்த உண்மை!! பெண்ணியமெல்லாம் பொய்யா?

கவுசல்யா மறுமணம் புரிந்த சக்தி என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு, செங்கொடி மக்கள் மன்றத்தில் மாணவர்களுக்கு பறையிசை ஆசிரியராக இருந்ததாகவும், அதில் நான் அவருக்கு மாணவர் என்றும், திலீபன் மகேந்திரன் என்ற ஒரு இளைஞர் கூறிக்கொண்டு, தன்னுடைய பார்வையிலிருந்து கவுசல்யா மற்றும் சக்தியை பற்றிய சில விஷயங்களை வெளியிடுகின்றார். கவுசல்யாவை பெண்ணியவாதியாக பார்க்கும் பலருக்கு இந்த விஷயங்கள் அதிர்ச்சியை தரும் விதமாக உள்ளது.

திலீபன் தனது முகநூல் பக்கத்தில், ‘ சக்தியிடம் 2 வருடங்களுக்கு முன் செங்கொடி மக்கள் மன்றத்தில் தான், நான் பறை கற்று கொண்டேன். என்னுடன் சுமார் 20 நபர்கள் கற்றுக் கொண்டனர். அப்போது சக்தி ஒரு பெண்ணை காட்டி, ‘இவர் தான் எனது இணையர். 2 வருடமாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருவரும் சேர்ந்து பறையிசையை வளர்க்கிறோம்’ என்றார். தற்பொழுது அவர் என்ன ஆனார் தெரியவில்லை.

சக்தியை நிமிர்வு பறைக்குழுவில் இருந்து எடுக்க காரணம், அங்கிருந்த பெண்கள் சக்தியின் மீது வைத்த குற்றச்சாட்டு தான். ஆனால், கவுசல்யா, ‘ஆணவப்படுகொலைக்கு எதிரான குரல்’ என்று கூறி விசிக கட்சி அலுவலத்தில் தலைவர்களை அழைத்து மீட்டிங் போடு குற்றம் கூறிய பெண்களை வெளியேற்றிவிட்டு சக்தியை கலைக்குழுவில் வைத்து கொண்டார்.

அப்போது, ‘சக்தி இருந்தால் தான் ப்ரோகிராம் வரும், அந்த பெண்களால் பயனில்லை’ என நிர்வாகத்திடம் கவுசல்யா கூறியுள்ளார். மேலும், அவர்களின் ட்ரேட் மார்க் வாசகமான, ” பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை” என்பதை கூறிக்கொள்வது எச். ராஜா ஸ்டைலில்,” வெக்கமா இல்ல” என கேட்கிறேன்.

சக்தி ஒரு bisexual குரூப் வைத்துள்ளார். விவாகரத்து ஆனவர்கள், கணவரை இழந்தவர்கள், இளம்பெண்கள், ஆண், திருநங்கை, திருநம்பி என யாரையும் விடுவதில்லை. செக்ஸ் என்பது வெறும் இயற்கையானது என அள்ளிவிட்டு ஆப்பாயில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அடுத்து வளர்மதி, இவர் கவுசல்யாவின் தோழி. இவர்கள் பெண்கள் சக்தியை பற்றி குற்றம் கூறிய பொழுது அவர்களுக்கு ஆதரவாய் தனது முகநூல் பக்கத்தில், “அந்த பெண்கள் தான் சக்தியை சீண்டினார்கள் என்றும், திருநங்கை ஒருவரிடம் அனுப்பிய நிர்வாண காணொளி, தெரியாமல் எடுக்கப்பட்டது என்றும், பதிவிட்டு உள்ளார். ஆனால் அந்த பதிவை அரை மணி நேரத்தில் டெலிட் செய்து விட்டார்.

இவர்தான் கேரளாவிற்கு நிவாரணம் திரட்டுகிறேன் என்று, 80 ஆயிரம் திரட்டி மறுநாள் ரயில்வே ஸ்டேஷனுக்கு போகையில் போலீசார் அத்துமீறினர் என கோஷம் போட்டவர். அந்த 80 ஆயிரம் நிதி என்ன ஆயிற்று என்று கேட்டதுக்கு என்னை ஆணாதிக்கவாதி என கூறியவர். அதாவது தான் செய்தால் புரட்சி பிறர் செய்தால் அது போலி. WTF லாஜிக்.

நீக்கிய அந்த பதிவை மீண்டும் பதிவிட்டு, சக்தி அந்த திருநங்கையிடம், ” தயவுசெய்து வெக்கியே கூறிவிடாதே” என கூறிய ரெக்கார்டை நான் பதிவிடுகிறேன். அப்பொழுது சக்திக்கு ஆதரவாக கவுசியும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுசல்யா சங்கர், திருமணம் ஆன சில நாட்களிலேயே அவர் வீட்டில் அவரை சந்தித்து, புரட்சி அது, இதுனு உங்க வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்கள். மறுமணம் செய்து கொண்டு வாழ்வை பாருங்கள் என்று கூறியவன் நான்.

இப்பொழுது ஏன் எதிர்க்கிறேன் என்றால், சங்கர் இறந்து 2 .1/2 வருடமானாலும், நீங்கள் சக்தியுடன் லிவிங் டூகெதர்ல இருப்பது, இரண்டு வருடமாக. அதாவது ஒருபக்கம் அவனுடன் வாழ்ந்து கொண்டே மறுபக்கம் மேடைகளில், “சங்கர் நினைவா நா வாழுறேன், ஆணவக்கொலைக்கு எதிரா பாடுபடுவேன்” என எனது பட்டியலின மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்.

என்னை ஒருவர் ஏமாற்றிவிட்டார் என ஒரு பெண் வந்தால் புரட்சி என்று கொதிக்கிற கவுசல்யா தான், சக்தியால் கருவுற்ற அந்த பெண்ணின் 6 மாத கருக்கலைய காரணமாக இருந்திருக்கிறார். அந்த பெண்ணையும் தற்கொலைக்கு தூண்டி இருக்கிறார். சக்தியின் காதலுக்காக அந்த சிசுவை கொன்ற கவுசல்யாவிற்கும், அவரது தந்தைக்கும் என்னை வித்தியாசமிருக்கிறது.

இதில் என்னை பெண்ணியம் வாழ்கிறது?இந்த மறுமணம் பற்றிய பலரது கேள்விக்கு, நாங்கள் வாழ்ந்து நிரூபிப்போம் என்று கவுசல்யா கூறுவது, ராஜபக்சே தமிழர்களுக்கு நன்மை செய்வோம் என்பதை போன்றது. கவுசிலேவிற்கு அரசு வேலை கிடைக்க காரணம், கொலைசெய்யப்பட்ட சங்கர் தான். கவுசல்யா சக்திக்கு அடிமையாக இருப்பதற்கு காரணமாக கண்டவர்களையும் நாங்கள் தலையில் தூக்கி வைத்து ஆடமுடியாது.

சங்கர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம், பல லட்சம் வசூல் செய்து அதில் சக்திக்கு கார் வாங்கி கொடுப்பதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாது. சங்கரின் பெற்றோரின் அறியாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு கவுசல்யா சக்தி ஹனிமூன் போக, எமது பட்டியலின மக்களின் சொத்து தான் வேண்டுமா?

சங்கரின் தம்பி வேலையில்லாமல், சென்னையில் சுற்றி வருகிறார். ஆனா உங்களுக்கு ஆடம்பர வாழ்க்கை? பறையை கற்றுக்கொண்டு அதனை பிஸினஸாக்கி நீங்கள் காசு சம்பாரித்திருக்கலாம் ஆனால், அதற்கு சொந்தமானவன் நான் கூறுகிறேன், ” இனி நீ பறையை தொடக்கூடாது’ அப்படி தொட்டால் கவுசல்யா சக்திக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் நான் பதிவிடுவேன்” என கூறியுள்ளார்.