மங்களவிடம் அதி முக்கிய அதிகாரங்கள்..

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் உள்ளிட்ட அரச ஊடகங்கள் அரச ஊடகங்கள் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று இரவு வெளியாகியுள்ளது.

குறித்த வர்த்தமானியில் பொலிஸ் திணைக்களம் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு அமைச்சு உட்பட 21 நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அரச அச்சக திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம், தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு சபை ஆகியவைகள் அதற்குள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.