அமெரிக்கா நாட்டில் இந்த காலமானது குளிர் காலம் என்பதன் காரணமாக அங்கு கடுமையான அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
அங்கு வீசிவரும் கடுமையான பனிபொழிவின் காரணமாக மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளில் வீசிய கடுமையான பனிபொழிவின் காரணமாக சுமார் 500 விமானங்கள் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக சுமார் 5700 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. மேலும் டகோட்டாவில் இருக்கும் விமான நிலையமானது தற்காலிகமாக மூடப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அங்குள்ள சமவெளி பகுதிகளில் பெய்த பனிப்பொழிவு மற்றும் கடுமையான காட்டின் மூலமாக சாலை போக்குவரத்தானது துண்டிக்கப்பட்டு மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடங்களுக்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த வேலையில் பனிப்புயலின் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டது காரணமாக கடும் அவதிக்கு மக்கள் உள்ளாகினர்.
இந்நிலையில்., இந்த பனிப்புயலின் தாக்கத்தில் 58 வயதுடைய பெண் பலியாகியுள்ளதாகவும்., பனிபடர்ந்த சாலையில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.