எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் செய்த செயல்!

வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 1.56 கோடி குடும்பங்களுக்கு ரூ.484 கோடி 25 லட்சம் செலவில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் நோக்கம்: 1983-ல் ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஏழை மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கினார். அதன்படி, ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் மூலம், கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், வருகிற 2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.484 கோடியே 25 லட்சம் செலவில், 1 கோடியே 56 லட்சத்து 54 ஆயிரம் சேலைகள், 1 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரம் வேட்டிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு முன்னோட்டமாக 5 குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை முதல்வர் பழனிசாமி வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பொங்கல் என்னென்ன பொருட்கள் வழங்கப்படும்: பொங்கல் தினத்தை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் கீழே குறிப்பிட்டுள்ள பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

பச்சரிசி : 1 கிலோ

சர்க்கரை : 1 கிலோ

கரும்புத் துண்டு 2 அடி

முந்திரி : 20 கிராம்

உலர் திராட்சை : 20 கிராம்

ஏலக்காய் 5 கிராம் ஆகிய பொருட்கள் வழங்கப்பட உள்ளன.