தற்போதைய வாழ்க்கைமுறையில் பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியமான விஷயமாகும். தமிழக்தில் அணைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.2000 முதல் 4000 வரை வசூலிக்கின்றனர்.
குழந்தை பிறந்த ஊரிலே இருந்தால், தடுப்பூசி போடும் தேதியை அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் நினைவூட்டுவார்கள். வெளியூரில் வசிப்பவர்கள் தடுப்பூசி போடும் தேதி மறந்துவிடும் நிலை ஏற்படும். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு புதிய சேவையினை வெளியிட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை குறுஞ்செய்தி(SMS) செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக செல்போனுக்கு SMS மூலம் வந்துவிடும். இந்த சேவைக்கு ” National Vaccine Remainder ” என்று பெயர்.
இந்த இலவச சேவையை இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு செய்யவேண்டியது space<குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி> என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.
உதாரணத்துக்கு, Immunize yalini 01-06-2015 என்று டைப் செய்து அனுப்புங்கள். அனுப்பியவுடனே ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும். அதனையடுத்து எந்த தேதியில் உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று தகவல் வரும்.
குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.
ஒருவேளை இந்த சேவை உங்களுக்கு தேவை இல்லை என நினைத்தால் ” Immunize stop” என்று 566778 என்ற எண்ணிற்கு SMS செய்தால், இந்த சேவை உங்களிடம் இருந்து நீக்கப்படும்.