தற்போது, நாடெங்கிலும், சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் அதிகம் நடைபெற்று வருகின்றன.
இதனைத் தடுப்பதற்காக, சமீபத்தில் மத்திய அரசு, போக்சோ சட்டம் கொண்டு வந்தது. எண்ணற்றோர், இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர். ஆனாலும், இந்த பாலியல் வன் கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனால், இனி 18 வயதிற்கு கீழே உள்ள, சிறார்களிடம் பாலியல் வன்புணர்வு கொண்டால், அவர்களுக்கு துாக்கு தண்டனை அளிக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கு அமைச்சரவையில், ஒப்புதலும் வழங்கப் பட்டுள்ளது.
இதன்படி, போக்சோ சட்டத்தின் 4,5,6-வது பிரிவுகளில், சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.
மேலும், சிறுவர்களை ஆபாசமாகப் படமெடுப்பவர்கள், அதை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்பவர்களையும் கடுமையாக தண்டிக்கும் விதமாக, சட்ட திருத்தம் மேற் கொள்ளப்பட உள்ளது.
இது தவிர, சிறுமிகளை, சீக்கிரம் பருவம் அடையச் செய்வதற்காக, அவர்களுக்கு, ஹார்மோன் ஊசிகளைச் செலுத்தினால், அதற்கும், கடுமையான தண்டனை வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது.