சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில், பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

சென்னையில் இருந்து 14,263 அரசு சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக வருகிற ஜனவரி 9 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட இருக்கிறது.

இந்த சிறப்பு பேருந்துகள் வருகிற ஜனவரி 11 முதல் 14ஆம் தேதி வரை இயக்கப்பட இருக்கிறது. மேலும், பொங்கல் முடிந்து சென்னை திரும்பவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கபட உள்ளது.

பயணிகளின் வசதிகாக, கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து, வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதற்காக 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான முன்பதிவு மையங்கள் ஜனவரி 9 முதல் ஜனவரி 14 வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து முன்பதிவு செய்த பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்.

பொங்கல் முடிந்து பிறகு பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர ஜனவரி 17 முதல் ஜனவரி 20 வரை 3776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதே போல, பிற முக்கிய ஊர்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 7841 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

எந்தெந்த ஊருக்கு எந்தெந்த பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற விவரம் பின்வருமாறு:

மாதவரம் புதிய பேருந்து நிலையம் : ஆந்திரா மார்க்கம் செல்லும் அனைத்து பேருந்துகள் இயக்கப்படும்.

கே.கே.நகர் பேருந்து நிலையம் : ஈசிஆர் மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் சானிடோரியம் : விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலையம் : திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பூவிருந்தவல்லி( பூந்தமல்லி): வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.

பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்று சாலை வழியாக வண்டலூர் செல்லும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.