உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின!

உயர் தரப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் மாணவி கந்தையா ஜனனி முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தாண்டு நடந்த கல்விப் பொது தராதர உயர் தரப்பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள பெறுபேற்றின்படி கிளிநொச்சி மாவட்டம் கிளி. முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையினைப் பெற்றுள்ளார்.

இதேவேளை http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 03 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.