சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக தேடப்பட்ட கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டார்.
அவரது பெற்றோர் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்த போது, அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
அந்த சிறுமியின் சகோதரர் வகையிலான உறவினரான 18 வயதான அஸ்வின் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், செல்வபுரம் காவல்துறையினர் அஸ்வின் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் (போக்ஸோ) 2012 ன் கீழ்வழக்குப்பதிவு செய்தனர்.
அஸ்வின் கோவையில் உள்ளஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தது தெரிந்தது.
காவல்துறையினர் தேடுவதை அறிந்த அஸ்வின் தலைமறைவானார். இந்நிலையில், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அஸ்வினை செல்வபுரம் காவல்துறையினர் கைது செய்து, ஜே.எம்.5வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.