புனே நகரின் கோத்ரூட் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன் வீட்டு ஜன்னல் வழியாக ஏலியன்களை பார்க்க பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திற்கு, மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பியுள்ளார். தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, விசாரணை நடத்திய புனே நகரின் சிங்காடு சாலை காவல் நிலைய காவலர், கடந்த சில ஆண்டுகளாக, அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால், வீட்டை ஒட்டி இருந்த மரத்தின் நிழலை ஜன்னலில் கண்டு, ஏலியன்களை பார்த்ததாக கூறியதகவவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 31-ஆம் தேதியன்று ஏற்பட்ட ப்ளூ ரெட் மூன் எனும் அரிய விண்வெளி நிகழ்வின் போது நிலவின் அருகே எதோ பறப்பது போன்றும், நிலவை அந்த மர்மமான பறக்கும் பொருள் கண்காணிப்பது போன்றும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அது ஏலியன்கள் அல்லது வேற்றுகிற வாசிகள் என்ற பீதி மக்கள் மத்தியில் பரவியது. இறுதியில் அது போலியான வீடியோ என்று தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
No alien activity was suspected after PMO office ordered an immediate inquiry on basis of mail that alien-like elements were found near house of man who raised issue
Read @ANI Story | https://t.co/I8uUwHWI1w pic.twitter.com/JXyZCDjgFY
— ANI Digital (@ani_digital) December 28, 2018