இந்திய அணியின் நேற்றைய சொதப்பல்!. இன்றைய அசத்தல்!

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்னில் இரண்டு தினங்களுக்கு முன் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் மயங்க் அகர்வால்76 ரன்களும், புஜாரா 106 ரன்களும், விராட் கோலி 82 ரன்களும், ரோகித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் இந்திய அணி 169.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளர் செய்தது. இந்தநிலையில் ஆஸ்திரேலிய அணி அவர்களின் முதல் இன்னிங்சை துவங்கினர். ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சினால் ஆஸ்திரேலிய அணி, ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை அடுத்து அடுத்ததாக பறிகொடுத்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 65.5 ஓவர்களில்151 ரன்களுக்கு அனைது விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட 290 ரன்கள் ஆஸ்திரேலியா அணி பின்தங்கியுள்ளது. அதிகபட்சமாக இந்திய பந்து வீச்சாளர் பும்ரா 6 விக்கெட்டுகளும், ஜடேஜா 2விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, சமி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

மீண்டும் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய புஜாரா மற்றும் கோலி இருவருமே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 8 விக்கெட் 106 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

இதனையடுத்து தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் ஆஸ்திரேலியா அணி 27 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இன்னும் 300 ரன்கள் தேவைப்படுகிறது.