விலையும் கம்மி…! ஏகப்பட்ட நோயைக் குணப்படுத்தக் கூடியது…!

ஆப்பிள் பழம் சாப்பிட்டிருக்கிறோம், அதன் மருத்துவக் குணங்களைப் பற்றியும் தெரிந்திருப்போம். ஆனால், அந்த ஆப்பிளையும் தாண்டிய அரிய மருத்துவக் குணங்களைக் கொண்டது, ரோஸ் ஆப்பிள்!

பார்ப்பதற்கு, ஏதோ, பம்பரங்கள் எல்லாம், பழங்களாக, உருவெடுத்தது போலத் தோற்றமளிக்கும், இந்த ரோஸ் ஆப்பிள் தற்போது, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தலை ஊற்றில் உள்ள தோட்டத்தில், பழுத்துக் கிடக்கின்றன.

இங்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல பகுதிகளிலும், இந்த ரோஸ் ஆப்பிள் மரங்கள் வளர்க்கப் படுகிறது.

இந்த ரோஸ் ஆப்பிள், சாப்பிடுவதற்கு, மொறு மொறு என்று சுவையாக இருக்கும். இதன் ருசியும் அபாரமாக இருக்கும். எத்தனை பழங்கள் தின்றாலும், தித்திப்பு ஏற்படாது. திகட்டாது.

மிக முக்கியமாக, இந்த ரோஸ் ஆப்பிள் பழங்களில், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பது, காய்ச்சலைக் குணப்படுத்துவது, புற்று நோய் வராமல் தடுப்பது உள்ளிட்ட, எண்ணற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.

இந்த ரோஸ் ஆப்பிளின் சீசன் இப்போது துவங்கி உள்ளது. விலையும் குறைவு என்பதால், இந்தப் பழங்களை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

இதனால், இந்த ரோஸ் ஆப்பிள் மரங்களை வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.