கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்! தானம் அளித்த இளைஞர் உயிரிழப்பு!

கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் ரத்தம் அளித்த இளைஞர் இன்று உயிரிழந்தார்.

விருதுநகர் சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்ணுக்கு எச்ஐவி மற்றும் மஞ்சள் காமாலை தாக்கியுள்ள நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் குழு கண்காணிப்பின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் ரத்தத்தை தானமாக வழங்கிய 19 வயது வாலிபர் ராஜேஷ் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை ஒத்துழைக்காமல் இருந்து வந்தார், இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.