மருக்கள் பெரும்பாலும் வைரஸ் தொற்றினால் உண்டாவதாக சொல்லப்படுகின்றது.
மருக்கள் சருமம், வாய், பிறப்புறுப்பு, ஆசன வாய் பகுதி போன்ற உடலின் பல்வேறு பாகங்களிலும் இவை உண்டாகலாம்.
இவற்றை எளிதில் போக்கு இயற்கை வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்.
- ஆளி விதை எண்ணெய் மற்றும் சுத்தமான தேன் சிறிதளவு சேர்த்து கலக்கவும். இந்த பத்தை மருவின் மீது தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒட்டவும். இந்த பத்தை தினமும் புதிதாக தயாரித்து உபயோகிப்பது நல்லது.
- பூண்டு பல் ஒன்றை நசுக்கி, பாதிக்கப்பட்ட பாகத்தின் மேல் தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒன்றை ஒட்டி விடுங்கள்.
- அன்னாசிப்பழத்தை அவ்வப்போது வெட்டி, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களை குணமாக்கும்.
- அத்திப்பழத் தண்டுகளில் இருந்து சாறு எடுத்து, அதனை ஒரு நாளில் பலமுறை, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களை காணமால் போய்விடும்.
- நறுக்கிய வெங்காயத் துண்டை ஒரு இரவு முழுவதும் வினிகரில் ஊற வைக்கவும். காலையில், இந்த ஊறிய வெங்காயத் துண்டை மருவிருக்கும் பகுதியின் மீது வைத்து, அதன் மீது பான்டேஜ் ஒட்டவும்.
- கற்பூர எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியின் மீது ஒரு நாளில் பலமுறை தடவி வர வேண்டும்.
- சுண்ணக்கட்டி அல்லது பச்சை உருளைக்கிழங்குத் துண்டு போன்றவற்றை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வந்தால், மருக்கள் நீங்கப் பெறும்.
- நாளொன்றுக்கு இருமுறை, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது விளக்கெண்ணெய் தடவி வருவது, அப்பகுதியை மிருதுவாக்குவதுடன், மருக்களையும் அகற்றும் வல்லமை வாய்ந்தது.
- டீ ட்ரீ ஆயில் அல்லது தேயிலை மர எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுவது மருக்களை அகற்றும்.
- மரு இருக்கும் பகுதியில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் அமிழ்த்தி வையுங்கள். அதன் பின், சீடர் வினிகரை பஞ்சில் தோய்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, நன்றாக காய விடுங்கள். பின்னர், இப்பகுதியை சாதாரண நீரில் கழுவி, நன்றாக துடைத்து விடுங்கள்.
- வாழைப்பழம் ஒன்றை தோலுரித்து, அத்தோலின் உட்பக்கம் மருவின் மேல்பகுதியில் படுமாறு சுற்றிக் கட்டுங்கள். 12 முதல் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை, இத்தோலை அகற்றி விட்டு புதிதாக உரித்த தோலை கட்டுங்கள்.