அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியும் இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. ஐ.நா அகதிகள் அமைப்பின் தூதராகவும் உள்ள அவர் பிபிசி ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் அரசியலில் நுழையும் நோக்கத்தில் நீங்கள் செல்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘இந்த கேள்வியை 20 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால் நான் சிரித்திருப்பேன். எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை.
ஆனால், தேவைப்படும் இடத்துக்கு நான் செல்வேன் என நான் எப்போதும் கூறுவேன். அரசியலுக்கு நான் தகுதியா என தெரியவில்லை. தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடுவேன்’ என தெரிவித்தார்.