ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, அரை மணி நேரத்திற்குள் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக நியமித்ததாகவும் மகிந்த பதவிப் பிரமாணம் செய்யும் வரை தனக்கு அதுபற்றி தெரியாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் கீரியும் பாம்பும் போல் எதிரிகளாக இருந்ததாகவும் மேடைகளில் பல்வேறு கதைகளை கூறி விமர்சித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் தற்போது ஒன்றாக இணைந்து கொண்டாலும் கிராமங்களில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரும் கீரியும் பாம்பும் போல் எதிரிகளாகவே உள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் எனக்கு எப்படியான குறைப்பாடுகள் இருந்தாலும் அரசியல் விளையாட்டை ஆடப் போவதில்லை எனவும் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளனர்.