வெற்றிபெறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணி போராட்டம்

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 399 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில்  இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமனில் வைத்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போனில் டிச 26 ல் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பெட் செய்த இ்ந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக புஜாரா 106 ரன்களும், கேப்டன் கோலி, 82 ரன்களும், மயங் அகர்வால் 76 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வீரர் பும்ராவின் அபார பந்துவீச்சில் 151 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஹரிஸ், பெய்ன் தலா 22 ரன்களும், கவாஜா 21 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய பும்ரா 6 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 4 ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி  8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக மயங் அகர்வால் 42 ரன்களும், பாண்ட் 33 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில், கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தனர்.

இதனைதொடர்ந்து, 399 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் வரை 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.