கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல அதையும் தாண்டி என்பதனை இன்று முடிந்த பாக்ஸிங் டே டெஸ்ட் தொடங்கிய அன்றே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செய்து காட்டியது.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் போடுவதற்காக இந்திய அணியின் கேப்டனும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் மைதானத்திற்கு உள்ளே வரும்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயினுடன் 6 வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர் ஆஸி அணியின் இணை கேப்டனாக உள்ளே நுழைந்தான்.
அந்த சிறுவன் ஆர்ச்சி சில்லர், பிறவி முதல் இருதய வால்வு நோயாளி. 6 வயதிற்குள் 13 அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டவன். ஆஸ்திரேலிய அணியின் கௌரவ கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள சிறுவன் டிம் பெயின், விராட் கோலியுடன் இணைந்து மூன்றாவது கேப்டனாக டாஸ் போடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆர்ச்சி சில்லர் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் 15 ஆவது வீரராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என கணிக்க முடியாத நிலையில் மகிழ்ச்சியான வாழ்வை கொடுக்க வேண்டுமென நினைத்த அவருடைய பெற்றோர் உனக்கு என்ன ஆசை என்று கேட்டபொழுது கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலியே அணியின் கேப்டனாக வேண்டும் என்று கூறியதை அடுத்து, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினை அணுகி அதற்கு பயிற்சியாளர் லங்கார் ஒப்புதல் அளித்தார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கௌரவ கேப்டனாக ஆர்ச்சி ஷில்லர் இணைந்துள்ளார். இன்றைய போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் ஆஸி அணியின் இணை கேப்டன் ஆர்ச்சி சில்லர் கைகொடுத்தார். இந்திய வீரர்கள் அவருக்கு கைகொடுத்து தட்டி கொடுத்து வாழ்த்தியது நெகிழ்வான சம்பவமாக இருந்தது.
சிறுவனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற நிலை இல்லாத நிலையில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கொடுத்து ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. ரசிகர்கள் அனைவருக்கும் இது ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. கிரிக்கெட் ஒரு விளையாட்டு, வியாபாரம் மட்டும் அல்ல அதையும் தாண்டி உணர்வுபூர்வமானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது
Onya Archie! What a week he’s had leading the Aussie team in Melbourne.
And great stuff here from the Indian players and match officials after the Test match! #AUSvIND pic.twitter.com/Q0jRn52Jck
— cricket.com.au (@cricketcomau) December 30, 2018