விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க நடவடிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக வெளிநாடுகளில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கிக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம்

ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளிலும் அமெரிக்காவிலும் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று கூறப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் அந்த தடையை நீக்க விடுதலைப்புலிகள் சார்ப்பு அமைப்புகள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீ ருத்திரகுமாரன் இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.