அம்பலமாகுமா இரகசியம்? மஹிந்தவுக்காக ரணில் செய்யும் செயல்!

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய புதிய செயலாளரை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு புதிதாக மேலதிக செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கு பிரதமரினால் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சி தலைவருக்காக இதுவரை இவ்வாறான செயலாளர்கள் இல்லாத நிலையில், தற்போது எதிர்க்கட்சி அலுவலகத்தின் சிரேஷ்ட செயாளருக்கு மேலதிகமாக இந்த புதிய மேலதிக செயலாளர் நியமிக்கப்படவுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய இந்த அமைச்சரவை பத்திரம், பிரதமரினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் பிரதமர் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் வினவிய போது, அமைச்சரவை திருத்தம் தொடர்பான தகவல்கள் அனைத்தும் இரகசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.