கங்குலிக்கு பிறகு கோலி செய்த சாதனை!

மெல்போர்னில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்கவைத்து கொண்டுள்ளது. இதற்கு முன் இறுதியாக கடந்த 2004 ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை சமன் செய்த போது, 2001 இல் இந்திய தொடரை வென்றதால் பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2-1 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இறுதி போட்டி சிட்னியில் நடக்க இருக்கிறது. அடுத்த போட்டியில் தோல்வியே அடைந்தாலும் தற்போது அதனை கோலி சமன் செய்துவிட்டார். அடுத்த போட்டியை ட்ரா செய்தாலோ, வெற்றி பெற்றாலோ இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கோப்பையை வெல்வது முதலைமுறையாகும்.

கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி கடந்த 1980-81-ம் ஆண்டில் மெல்போர்ன் மைதானத்தில் கிரேக் சாப்பல் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை மண்ணை கவ்வ வைத்தது. அதன்பின் இந்திய அணி ஏறக்குறைய 37 ஆண்டுகளுக்குப் பின் 2 வெற்றிகளை ஆஸியில் பெற்றுள்ளது.

தற்போது விளையாடும் அணியில் உள்ள வீரர்கள் யாருமே அப்போது பிறக்கவில்லை என்பது தான் சுவாரசியமான ஒன்றாகவும். ஏறக்குறைய ஒரு தலைமுறை தாண்டிய பிறகு இந்த வெற்றி கோலி தலைமையில் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

இந்திய அணியில் விளையாடுபவர்களின் பிறந்த வருடங்களானது, 1987 : ரோஹித் சர்மா 1988 : கோலி, புஜாரா, ரஹானே, இஷாந்த், ஜடேஜா, 1990: ஷமி 1991: மயங்க் அகர்வால், 1993: விஹாரி, பும்ரா, 1997: பாண்ட் என அனுபவ வீரர்களே இல்லாத அணியாக இந்திய அணி உள்ளது. தற்போதைய இந்திய அணியில் மயங்க் அகர்வால், விஹாரி, பும்ரா, பாண்ட் என நான்கு பேர் இந்த வருடம் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.