சிறுவன் கொலை!’ – பழிதீர்த்த தாய்!

திருவண்ணாமலையில் நேற்று ஒரு வாலிபர் கொடூரமாக கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை செய்யப்பட்டவரின் விவரம் தெரியாமல் இருந்து வந்த நிலையில், இன்று அவரின் விவரம் முழுமையாகத் தெரிந்தது.

அவர் பெயர் நாகராஜ். சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணிற்கும் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு இருந்தது.

இதற்கிடையே, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவின் 9 வயது மகனைக் கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவானார் நாகராஜ்.

கள்ளத்தொடர்புக்கு இடைஞ்சலாக இருந்ததால் மஞ்சுளாவுக்கு தெரியாமலே 9 வயது சிறுவனை துடிதுடிக்க இரும்பு கம்பியால் அடித்து நாகராஜ் கொலை செய்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

தனது மகனைக் கொலை செய்த நாகராஜன் கொலை செய்யும் எண்ணத்தில் மஞ்சுளாவும் இருந்துள்ளார்.

ஜாமீனில் வெளியே வந்த நாகராஜை கொலை செய்யும் நோக்கில் கள்ள துப்பாக்கியை வாங்க முயன்றுள்ளார்.

இதனால் போலீஸார் அவரைக் கைது செய்தனர். தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதை உணர்ந்த நாகராஜ் திருவண்ணாமலை வந்து தலைமறைவானார்.

தன்னால் நாகராஜை கொலை செய்ய முடியாத மஞ்சுளா கூலிப்படையை அணுகினார். அதன்படி திருவண்ணாமலையில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவரை, தேடிச் சென்ற கூலிப்படையினர் நேற்று அவரைக் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.

பட்டப்பகலில் சாலையில் வைத்து கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்த உடலைக் கைப்பற்றினர்.

கொலை தொடர்பாக எஸ்.பி சிபிசக்கரவர்த்தி சென்னை எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்திற்கு இன்று காலை வந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

இந்த வழக்கில் மஞ்சுளாவிற்கு துணையாக நின்ற கூலிப்படையினர் யார் என்பதைத் தனிப்படை அமைத்து போலீஸார் தேடிவருகின்றனர்.