ஹரியானாவி மொழி பாடகியும் நடிகையுமான அனாமிகா, விஷம் குறித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் பேசப்படும் ஹரியானாவி மொழி பாடகியும், நடன கலைஞரான அனிகா பாவா (30) இதுவரை 2500 பாடல்கள் பாடியும், 4000க்கும் அதிகமான பாடல்களில் நடித்தும் இருக்கிறார்.
இவர் கடந்த சனிக்கிழமையன்று எலி மருந்து சாப்பிட்டதால், ஹிசார் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் விசாரணை நடத்துவதற்காக அனாமிகாவின் வீட்டிற்கு சென்றனர்.
பொலிஸார் விசாரணையில் 12 வருடங்களாக பாடகராக பணியாற்றி வந்த அனாமிகா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஷாஹ்கார் கன்னாவை சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார்.
இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டிலும் பச்சை கொடி காட்டியதால் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால், அனாமிகா கோபித்துக்கொண்டு ஹிஸார் நவிதிப் காலனியில் இருக்கும் தாய் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் சனிக்கிழமையன்று கணவரின் பிறந்தநாள் வந்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கணவர் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ காட்சியினை அனாமிகாவிற்கு அனுப்பியதோடு, கன்னாவை விவாகரத்து செய்யுமாறும் அந்த பெண் வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதில் மனமுடைந்து தான் தற்கொலைக்கு முயன்றதாக அனாமிகா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.