சிறிலங்காவில் நாளை தொடக்கம் ஸ்மார்ட் அடையாள அட்டை!

சிறிலங்காவின் ஆட்பதிவுத் திணைக்களம் நாளை தொடக்கம், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

“இந்த அடையாள அட்டைகள், ஸ்மார்ட் தேசிய அட்டைகளாக அறிமுகப்படுத்தப்படும்.

விண்ணப்பதாரிகள், புதிய அடையாள அட்டைகளுக்கான ஒளிப்படங்களை மின்னஞ்சல் மூலமே அனுப்ப வேண்டும்.

அனுமதிபெற்ற ஒளிப்படப்பிடிப்பு நிலையங்களிலேயே ஒளிப்படங்கள் எடுக்கப்பட வேண்டும் , ஔப்படத்துக்கான பற்றுச்சீட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

நாடு முழுவதும், 2100 ஒளிப்பட நிலையங்கள், இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.