நாளை முதல் தமிழகத்தில், நெகிழி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்களுக்கு தடை என்பதைபற்றி தெரிந்துகொள்வோம்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2019 ஜனவரி 1 தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக, கடந்த ஜூன் 5-ம் தேதி சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பொருட்கள்:
கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
* மக்காத பிளாஸ்டிக் தட்டுகள்
* பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்
* நீர் குவளைகள்
* தண்ணீர் பாக்கெட்டுகள்
* பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்
* பிளாஸ்டிக் கைப்பை
* பிளாஸ்டிக் கொடி.