டிடிவி தினகரன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நாளை ஆங்கில புத்தாண்டு பிறக்க இருக்கிறது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டிடிவி தினகரன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

உலகமெங்கும், உற்சாகத்துடனும், உவகையுடனும் கொண்டாடப்படும் இப்புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிறந்திடும் இப்புத்தாண்டு நமது கடின உழைப்பு அத்தனையும் வெற்றிகளை அள்ளித்தந்து நற்பலனை வழங்கிடட்டும். நம் கனவுகள் அனைத்தும் வடிவமெடுத்து எங்கும் எதிலும் நிறைவோடு எட்டுத்திக்கும் மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .

இவ்வாறு அவர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.